நாம் அடைய நினைப்பதும் அதற்கான வழிகளும்.

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெள்ளி, 1 ஜனவரி, 2010 0 கருத்துகள்

கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தொலை நோக்கு (VISION)


இன்றைய  எமது இளைய சமுதாயம் எதிர் காலத்தில் கல்வி ரீதியான எழிற்சியும்  சமுக பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்தல்.


கல்வி அபிவிருத்தி சங்கத்தின் துராநோக்கினை அடைவதற்கான வழிகள் (MISION)


01. பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் விபரங்கள் சேகரித்தலும் ஆய்வுகளை மேற்கொள்ளலும்


02. பெற்றோர்களுக்கு கல்வியின் அவசியம் தொடர்பில் கருத்தரங்குகள் போன்றவை மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தல். 


03. மாலை, இரவு நேர மற்றும் விடுமுறை நாட்களில் இலவச வகுப்புக்களை நடாத்துதல்.


04. கல்வியை தொடர முடியாத நிலையில் இருக்கின்ற வறிய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்குரிய வழிமுறையினை ஏற்படுத்திக் கொடுத்தல்.


05. கல்வி கற்று வேலையற்று இருக்கும் இளைஜர், யுவதிகளை இடைவிலகிய மாணவர்களுக்கான கற்பித்தல், கற்பித்தல் தொடர்பான புற செயத் பாடுகளில் ஈடுபடுவதற்கு   தூண்டுதலும் வழி  நடாத்துதலும்

 
06. அரச, தனியார் துறைகளில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களை எதிர்கால சந்ததிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்வதற்காக உள்வாங்கல்.


07. அனைத்துலக கல்விமான்கள், சமுக நலன் விரும்பிகளின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெறல்.  


08. அனைத்துலக நலன் விரும்பிகளுடாக கல்வியோடு இணைந்த கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தல்.

09. இளைய சமுதாயத்தின் கல்விக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அனைத்துலக அரச, அரச சார்பற்ற நிறுவனங்களோடு தொடர்பினை ஏற்படுத்தி எமது சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயற்படல்.


10. கல்வி ரீதியான தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு அதனுடாக மாற்றத்தை ஏற்படுத்தல்.

கல்வி நிறுவனத்தின் இலக்கு (GOALS )


01. இடை விலகிய மாணவர்களுக்கு பிரத்தியக வகுப்புக்களை தொடர்சியாக நடாத்தி மீண்டும் கல்வி  செயற்பாட்டில் இணைத்தல்.


02. தினமும் கற்றலுக்கான நேரத்தை ஒதுக்கி இடை விலகிய மாணவர்களை வழி நடாத்துதல்


03. இடை விலகிய மாணவர்களுக்கான தொடர் பின்னுட்டலும், கற்றலுக்கான உதவிகளையும் பெற்றுக் கொடுத்தல்.


04. இடை விலகிய மாணவர்களின் பெற்றோரோடு நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி மாணவர்களின் முன்னேற்றத்தையும், பெற்றோரின் பங்களிப்பினையும்  இடை விடாது பேணல்.


05. கற்றல் தொடர்பான புற செயற்பாடுகளான விளையாட்டு, சுற்றுலா, கலை, கலாசார நிகழ்வுகள், போட்டி நிகழ்சிகள் என்பனவற்றினை நடாத்துவதன் மூலம் கற்றலில்  ஊக்கத்தை ஏற்படுத்தல்.


06. மாணவ குழுக்கள் மூலமான தலைமைத்துவ பண்புகளை ஏற்படுத்தல்.


07. பரிட்சைகள், மீட்டல்கள் என்பவற்றை ஒழுங்கான நேர  சூசியோடு நடாத்துதல்


08. கற்பித்தலில் தேர்ச்சி பெற்ற ஆசான்களின் ஆலோசனைகளையும், புதிய நுட்பங்களையும் பயன்படுத்தல்.


09. இடை விலகிய மாணவர்களுக்கான கல்வி சார்ந்த உதவிகளையும், ஒத்துளைப்புக்களையும் பெற்றுக் கொடுத்தல்.


10. உலகெங்குமிருந்து உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் நிறுவனங்கள், நலன்விரும்பிகளோடு சிறந்த உறவினைப் பேணலும் ஆய்வு ரீதியான அறிக்கைகளை அவர்களுக்கு உரிய நேரத்தில் சமர்ப்பித்து உண்மைத் தன்மையைப் பேணல்


கல்வி அபிவிருத்தி சங்கத்தின் நோக்கம் (OBJECTIVE )


01. மாலை, இரவுநேர வகுப்புக்களை நடாத்துதல்.


02. சிறந்த கல்வியாளர்களை  பயன்படுத்துதல்.


03. மாணவர்களுக்கு உளவள ஆலோசனைகளை தொடர்சியாக பெற்றுக் கொடுத்தல்


04 . பெற்றோருக்கு உளவள ஆலோசனைகளை தொடர்சியாக பெற்றுக் கொடுத்தல்.

05. கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல்.

06. விபரங்கள் திரட்டல்.

07. படித்த இளைஜர்  , யுவதிகளை கற்பித்தல் செயற்பாடுகளில் உள்வாங்கல்.

08. காகிதாதிகள், கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்களை நலன் விரும்பிகளிடமிருந்தும்,  நிறுவனங்களிடமிருந்தும் துரித கதியில் பெற்றுக் கொடுத்தல்.  

09. இடை விலகிய மாணவர்களுக்குரிய உணவு சார்ந்த போசனை பொருட்களை வழங்கல்.

10 . கற்றல், கற்பித்தல், கல்வியின் அபிவிருத்தி மட்டங்களை உடனுக்குடன் மதிப்பிடு செய்தல்.

நாம் எதிர் கொள்ளும் சவால்கள்.

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் 0 கருத்துகள்

நாம் எமது கல்வி நிலையத்தின் மூலம் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கல்வியும் அதனோடு சார்ந்த பல்வேறு செயத் திட்டங்களை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கல்வி அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்போடு நடைமுறைப் படுத்தி வருகின்றோம்.

2010  க்காக கல்வியும் அதனோடு சார்ந்த பல்வேறு முக்கிய செயத்திட்டன்களை நடைமுறைப் படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். இருந்தபோதும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலே நிதிப் பற்றாக் குறையின் காரணமாக பல  சிக்கல்களை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது.

நாம்  தற்போது முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினைகள்.

01. கல்வி நிலையத்துக்கு நிரந்தர காணி, கட்டிட வசதி இல்லாமை.

தற்போது தனியார் காணியிலே தகரத்தினால் பல கொட்டில்களை அமைத்து மாலை நான்கு மணி தொடக்கம் இரவு எட்டு மணிவரைக்கும் மாணவர்களுக்கு இலவச வகுப்புக்களை வழங்கி வருவதோடு, மாதாந்த பரிட்சைகளையும் நடாத்தி வருகின்றோம்.

இரவு நேர இலவச வகுப்புக்கு வருகை தரும் மாணவர் விபரங்கள்.

தரம்  6 - 105
தரம் 7 - 106
தரம் 8 - 90
தரம் 9 - 45
மொத்தம் - 346

இத்தனை மாணவர்களும் இந்த இரவு நேர வகுப்பின் மூலம் பல நன்மைகளை அடைகின்றனர்.

இன்று கல்வி நிலையத்துக்கான இடம் தொடர்பிலே பல பிரச்சினைகளை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது. தற்போது கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணிக்கு சொந்தக்காரர் விரைவில் எமது கல்வி நிலையத்தினை வேறு இடத்துக்கு மாற்றும்படி சொல்லி இருக்கின்றார். அதனால் வேறு இடத்துக்கு மாருவதிலே இடத்தைப் பெறுவதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன.

உடனடியாக நாம் இடத்தினை பெற முடியாவிட்டால் இந்த 346 மாணவர்களது கல்வி நிலையில் சிறு தளம்பல் ஏற்படலாம்.

02. மின் பிறப்பாக்கி.(ஜெனறேட்டர்) இல்லாமை.

இரவு நேரத்தில் வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி மின்சாரம் தடைப் படுவதால் மெழுகு வர்த்தியிலேயே படிக்க வேண்டிய நிலை அடிக்கடி உருவாகின்றன. சில நாட்களில் மின்சாரம் தடைப் பட்டதால் வகுப்புக்களை இடை நடுவில் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு.

03. போட்டோ பிரதி இயந்திரம் இல்லாமை.

போட்டாப் பிரதி இயந்திரம் எமது கல்வி அபிவிருத்தி சங்கத்துக்கு மிக மிக அவசியமான ஒன்று மாதாந்தப் பரிட்சைகள் வைப்பதாலும் வேறு எமது சங்கத்தின் செயட்பாடுகளுக்காகவும் அதிகமாக போட்டோ பிரதி எடுக்க வேண்டி இருக்கின்றன. இவற்றை நாங்கள் வெளியில் எடுப்பதனால் போட்டோ பிரதிக்காக மாதாந்தம் அதிக செலவு செய்யவேண்டி இருக்கிறது. போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை பெறுவதன் மூலம் மாதாந்தம் அதிக பணத்தினை சிக்கனப் படுத்துவதோடு அப்பணத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.

04. வாசிகசாலையும், அதற்கான புத்தகங்களும், தளபாடங்களும் இல்லாமை.

எங்களிடம் 346 மாணவர்கள் இருந்தபோது ஒரு வாசிகசாலை இல்லை. ஒரு வாசிக்க சாலையும், அதற்குரிய புத்தகங்களும், தளபாடங்களும் இருக்கின்றபோது பாடவேளை தவிர்ந்த ஏனைய நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் பயன்படுத்துவதோடு, ஆசிரியர்களும் பல நன்மைகளை அடைய முடியும். இதன் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் பரந்த அறிவினைப் பெற முடியும்.

05. காரியாலய தளபாடங்கள் இல்லாமை.

கல்வி நிலையத்திலும் எமது பிரதான அலுவலகத்திலும் போதிய அலுவலக தளபாடங்கள் இல்லாமையால் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றோம். குறிப்பாக பரிட்சை வினாத்தாள்களை, மாணவர்கள் தொடர்பான ஆவணங்கள் வைப்பதற்குரிய வசதிகள் இல்லாமை.

மாணவர்களுக்கு வைக்கப் படுகின்ற பரிட்சைகளின் பெறுபேறுகள் பெற்றோருடைய பார்வைக்கு வழங்கப்பட்டு ஒவ்வொரு மாணவரது பெற்றோரும்  கையொப்பமிடப்பட்டு பேணப்பட்டு வருகின்றன ஆனால் அவற்றை வைப்பதற்குரிய அலுவலக தளபாடங்கள் இன்றி பல சிக்கல்களை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது.

06.  கணனித்தொகுதி (computer unit ) வசதி இல்லாமை.

வளர்ந்து வரும் தொழிநுட்ப வளர்ச்சிக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையிலே மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு மானவர்களுக்க் ஏற்ற வகையில்  தகவல் தொழினுட்பம் எனும் பாடத்தினை கற்பித்துவருகின்றோம். ஆனால் கணணி தொடர்பான செயன்முறைப் பயிற்சிகளை வழங்குவதற்கு கணணி வசதி இல்லை இதனால் பல சிக்கல்களை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது.

நாளைய சமூகத்துக்காக சிந்திப்போம்.

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் 0 கருத்துகள்


இன்று புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இந்த புதுவருடம் அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று ஆரவாரமாக நாம் புது வருடத்தினைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொரு விசேட பண்டிகைகளையும் மிகவும் சிறப்பான முறையிலே ஒவ்வொருவரு ஒவ்வொரு விதமாக கொண்டாடுவோம். எத்தனையோ ஆடம்பரங்கள் , தேவையற்ற செலவுகள் செய்கின்றோம்.


ஆனாலும் இன்று தாய், தந்தை, சொந்தங்களை இழந்த பல சிறுவர்கள் எத்தனையோ சிறுவர் இல்லங்களிலே அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏனைய சிறுவர்கள் இவ்வாறான விசேட தினங்களிலே புத்தாடை அணிந்து வான வேடிக்கைகளோடு ஆடிப்பாடி விளையாடும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை நாம் ஒரு நாளாவது எண்ணிப் பார்த்திருக்கின்றோமா?


நாம் இந்த விசேட பண்டிகைகள், தினங்களிலே அனாவசியமாக, ஆடம் பரங்கள் மூலம் வீண் செலவுகள் செய்வதனை விடுத்து அந்த பணத்தை கொண்டு சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்றைய நாளை அவர்களோடு நம் பொழுதைப் போக்கலமால்லவா? இதனால் அந்த சிறுவர்களின் மனதிலே ஒரு சந்தோச உயணர்வு தோன்றுமல்லவா?


நாம் எத்தனை பேர் இந்த சிறுவர்களைப் பற்றி சிந்திக்கின்றோம். அவர்கள் குறிப்பிட்ட சிறுவர் இல்லங்களிலே நல்ல முறையிலே நடாத்தப்பட்டாலும் அவர்கள் மனதிலே தான் ஒரு அனாதை என்கின்ற, தன்னால் மற்றவர்களைப்போல் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்ற ஒரு கவலை இருக்கும்

இன்று இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை எத்தனையோ சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் சிறார்கள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் பலர் இருக்கின்றார்கள். அந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி யாராவது சிந்தித்திருக்கின்றோமா?


இன்று பெரிய வசதியான குடும்பத்திலே பிறந்த சில பெண் பிள்ளைகளின் வாழ்க்கையே சீதனம், வரதட்சனை, அது, இது என்று திண்டாட்டமாக இருக்கின்றது. இப்படி அவர்களுக்கு இந்த நிலை என்றால் அனைத்தையும் இழந்து சிறுவர் இல்லமே தஞ்சமென்று இருக்கின்ற சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற அந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமைய இருக்கின்றது. இன்று அழகு, அந்தஸ்து பெரிய இடமென்று எல்லோரும் பெரிய இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக சிந்திப்போம்

இன்றைய நம் சிறுவர்களே நாளைய நம் தலைவர்கள் அவர்களின் எதிர் காலத்துக்காக நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம். நாம் இன்று நம் சிறுவர்களின் கல்வி வளர்சியிலே பின்தள்ளப் படுகின்றபோது நாளைய நம் சமுகத்தின் கல்வி நிலைதான் என்ன? சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்களின் மனதில் இருக்கின்ற கவலையின் காரணமாக படிக்கத்தான் முடியுமா?

திட்ட முன்மொழிவு - 01

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் புதன், 30 டிசம்பர், 2009 1 கருத்துகள்

திட்ட முன்மொழிவு

01. திட்டத்தின் தலைப்பி :-
கல்வி அபிவிருத்தி சங்கத்துக்கான இடத்தினை சீர் செய்து நிரந்தர கட்டிடம் அமைத்தல்.

02. இனம் காணப்பட்ட பிரச்சினை :-
 இடை விலகிய மாணவர்களையும், கல்வியில் பின் தங்கிய மாணவர்களையும் தொடர்சியாக வலி நடாத்தி செல்ல நிரந்தரமான இடம் இல்லாமை.

03. திட்ட விபரம் :-
கல்வி அபிவிருத்தி சங்கமானது  2002 முதல் தனியார் காணியிலேயே இயங்கி வருகின்றது.

தினமும் மாலை 4.௦௦ மணிமுதல் இரவு 8.௦௦ மணிவரை இரவுநேர வகுப்புக்களை தனியார் காணியிலேயே கொட்டில்களை அமைத்து நடாத்தி வருகின்றோம்.

எமது பிரதேசமானது பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களையும், கல்வியிலே பின் தங்கிய மாணவர்களையும் சிறந்த கல்விமான்களாக மாற்றுவதற்குரிய செயற்பாடுகளிலே நிரந்தரமாக ஈடுபடக்  கூடிய நிலையில் பல அமைப்புக்கள் உள்ளன. அவைகளின் செயற்பாட்டை நிரந்தரமாக்கல்

பகல் இரவு நேர கற்றல், கற்பித்தல். அறநெறிப்பாடசாலை நடாத்தல், கருத்தரங்குகளை நடாத்தல், சிறுவர் விளையாட்டு, வாசிகசாலை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு வள நிலையத்தை அமைத்தல்.

04. திட்ட நியாயப் படுத்தல் :-

 குறிப்பிட்ட செயத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்படுகின்ற களுதாவளைக் கிராமம். பாரியதொரு கிராமமாகவும், பாரம்பரிய விவசாயக் கிராமமாகவும் இருக்கின்றது.

கடந்த காலங்களில் இடம் பெற்ற இடம் பெயர்வுகளினால் இப்பிரதேசத்தில் அதிகமான மக்கள் குடியேறி இருக்கின்றனர்.

பொருளாதார ரீதியாக பல கஸ்ரங்களை எதிர் நோக்கும் அதிகமான குடும்பங்களைக் கொண்ட பிரதேசம்.

கல்வி ரீதியில் வளர்ச்சி அடையும் பிரதேசமாக இருந்தபோதும் வறுமை காரணமாக அதிக  மாணவர்கள் கல்வியிலிருந்து இடை விலகுகின்றனர்.

கல்வியை தொடர ஆர்வம் இருந்தும் போதிய பின்னுட்டல் கல்வி இன்மையால் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்படல். 

நிரந்தரமான பின்னுட்டல் நிலைமை இந்த பிரதேசங்களிலே இல்லாமை. 

இப்பிரதேசத்திலே அதிக மாணவர்கள் இருப்பதனாலும் அயற் பிரதேச மாணவர்களுக்கும் பொதுவான ஒரு இடமாக அமைகின்றது. 

05. நன்மை அடைவோர் :-

மாணவ, மாணவியர் உட்பட  எமது  ஒட்டு மொத்த சமூகமுமே.

06. திட்டத்தினை முன்னிலைப் படுத்துவோரும் பங்காளிகளும்.

கல்வி அபிவிருத்தி சங்கம் (கள ஆய்வு ரீதியாக எடுத்த திட்டம்)
கிராம அபிவிருத்தி சங்கம்
 விவசாய உற்பத்தி கூட்டுறவு சங்கம்
இளைஜர் கழகம்
விளையாட்டுக் கழகம்
பெற்றோர்கள். 

07. பங்கு பற்றுனர் :- 
கல்வி அபிவிருத்தி சங்கம், பிரதேச இளைஜர், யுவதிகள் 

08. திட்டத்தினால் நன்மை அடையும் பெண்களின் வீதம் :- 50%

09. திட்டத்துக்கான நிதிப் பொறுப்பும் தொடர் கண்காணிப்பும் :- 

கல்வி அபிவிருத்தி சங்கமும், பெற்றோரும்.

10. திட்டத்துக்கு தேவையான நிதியின் அளவு :- 10 மில்லியன்

இடத்தை சீர் செய்ய - 20 இலட்சம்
கட்டடம் சுற்றுமதில் - 60 இலட்சம்
மலசல கூடம் கிணறு - 2 இலட்சம்
வாசிகசாலை, உபகரணம், புத்தகம் - 5 இலட்சம்
கல்வி நிலையத்துக்கான உபகரணங்கள் - 10 இலட்சம்
ஏனைய செலவுகள் - 3 இலட்சம்
மொத்தம் - 10 மில்லியன்

11. போதுமான ஆளணி உள்ளதா :- ஆம் 

12.  திட்டத்தின் அளவு :-  150 x 100 மீற்றர் பரப்பு கொண்டது.

13. எந்த  நிறுவனத்துக்கு உட்பட்ட திட்டம் :-  பிரதேச சபை களுதாவளை (ம.தெ.எ.ப)

14. திட்டத்தின் பிரச்சினைகள் :- எதுவுமில்லை

15. திட்டத்தின் உள்ளீடுகள் பெறுவதில் தாமதம் உள்ளதா? :-
இல்லை அருகில் போதிய வளமுள்ளது.

16. பொருத்தமான இடமா :- ஆம் வரலாற்று ரீதியாக பல சாதனைகளை ஏற்படுத்தக்கூடிய இடம்.

17. திட்டத்துக்கு பொறுப்பான நிறுவனம் :- களுதாவளை கல்வி அபிவிருத்தி சங்கம். (EDS )

தயாரித்தவர் :- சே. அருள்ராஜா, களுதாவளை

நிறுவன முகவரி :- 
பிரதான வீதி
களுதாவளை - 4
களுவாஞ்சிக்குடி

அமெரிக்காவை சேர்ந்த ஜீன் ரிசியினால் ஒரு தொகுதி உபகரணங்கள் வழங்கப்பட்டபோது.
















அனைவரையும் ஆச்சரியப் படுத்திய சிறுவர்கள்.

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் திங்கள், 7 செப்டம்பர், 2009 0 கருத்துகள்

மட்டக்களப்பு களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் பல வருடங்களாக நம் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளிலே பல்வேறு பட்ட செயத்திட்டங்களிலே ஈடுபட்டு வருகின்றது அதிலும் குறிப்பாக பல்வேறு காரணங்களினால் பாடசாலையினை விட்டு இடை விலகிய மாணவர்களின் எதிர் காலம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருவதோடு பல செயத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இன்று மறைந்து வரும் தமிழர் நம் கலைகளை வளர்ப்பதிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வருடா வருடம் சிறுவர் கலை விழாவினையும் நடாத்தி வருகின்றது


இவ வருடத்துக்கான கலை விழாவானது 05.09.2009 சனிக்கிழமை மாலை 05.31 க்கு ஆரம்பமானது. (அழைப்பிதழிலே குறிப்பிடப் பட்டதுபோல் சரியாக 05.31 க்கே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.) இந் நிகழ்விலே பல துறை சார்ந்த்தவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறார்களின் திறமைகளைக் கண்டு வியந்து போனார்கள்.


மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், தமிழ் மொழி வாழ்த்து என்று ஆரம்பமான நிகழ்ச்சிகள் நான்கு மணித்தியாலங்கள் பார்வையாளர்கள் ஒருத்தரைக்கூட எழுந்து செல்ல முடியாமல் தங்கள் வசம் ஈர்த்திருந்தார்கள் சிறுவர்கள். இன்று பார்வையாளர்களை இறுதி வரை வைத்துக் கொள்வதென்பது முடியாத காரியம் ஆனால் இந்தச் சிறுவர்களால் முடிந்துவிட்டது.


இன் கலை விழாவிலே தமிழர்களுக்கே உரித்தான கரகம், கும்மி, கோலாட்டம் வில்லிசை, நாடகம்..... என்று எல்லோரையும் மகிழ்வித்தனர்.


இங்கே குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும். சிறுவர்களால் மேடை ஏற்றப்பட்ட நிகழ்ச்சிகள் எதிலுமே எமது பங்களிப்பு இருக்கவில்லை. நாடகமானாளும்சரி, நடனமானாலும் சரி அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது. நாங்கள் மேற் பார்வை செய்தது மட்டுமே. அவர்களின் திறமைகளைக் கண்டு வியப்படைந்து விட்டோம்.


இந்த கலைவிழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அடியேன்தான். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டன. (அறிவிப்பு ) ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்தது நான் இல்லை எட்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிதான்.
அடியேன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்கின்றேன்.







பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.











எமது கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களில் சிலர்.
இன்றைய தினக்குரல் பத்திரிகையிலே. சிறுவர் கலைவிழா தொடர்பான படங்களும், செய்திகளும் வெளிவந்தது இருக்கின்றன. தினக்குரல் பத்திரிகைக்கு நன்றிகள்

(சிறுவர் கலைவிழா வீடியோ விரைவில் உங்களை வந்து சேரும்)

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் பயணத்தில்....

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வியாழன், 19 பிப்ரவரி, 2009 0 கருத்துகள்

கடந்த  ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக கல்வி, கலை, கலாசாரத்துறைகளில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி பலரது மனதில் இடம்  பிடித்த ஒரு சமுக சேவை அமைப்பாக களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் விளங்குகிறது. கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு முன் பல சமுக சேவை நோக்கம் கொண்ட இளைஜர்,  யுவதிகள்  ஒன்று சேர்ந்து இப்பிரதேசத்திலே பல்வேறுபட்ட காரணங்களினால் பல சிறுவர்கள் கல்வியினை இடை நடுவில் விட்டு விலகுகின்றார்கள் அதற்கான  காரணம் என்ன அவற்றை  எப்படி இல்லாமல் செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். அதன் விளைவாக பல   சமுக சேவை நோக்கம் கொண்ட பலரை ஒன்றிணைத்து சிறுவர்கள் பாடசாலையை இடை நடுவில் விடுவதற்குரிய காரணங்கள் நன்கு  ஆராயப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய வழிவகைகள் கண்டறியப்பட்டு கல்வியும்  அதனோடு தொடர்புடைய செயற்பாடுகளும் மிகவும் சிறப்பான முறையிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தலைமையகம்

பிரதான வீதி,
களுதாவளை,
மட்டக்களப்பு,
இலங்கை.

தொலைபேசி இல:- 094778548295
செயட்பாட்டுப்பிரதேசம்:- இலங்கையின் அனைத்து இடங்களும்

எம்மைப் பற்றி

  • எம்மைப் பற்றி - கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக கல்வி, கலை, கலாசாரத்துறைகளில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி பலரதும்மனதில் இடம் பிடித்த ஒரு சமுக சேவை அமைப்பாக கல்வி அபிவிரு...
    14 ஆண்டுகள் முன்பு

இரவுநேர இலவச வகுப்பு ஒன்று கூடலின்போது

இரவுநேர இலவச வகுப்பு ஒன்று கூடலின்போது

இன்றைய உடனடித் தேவைகள்

01. கல்வி நிலையத்துக்கு நிரந்தரமான காணியும், கட்டடமும்

02. வாசிகசாலையும், அதற்கான புத்தகங்களும், தளபாடங்களும்.

03. போட்டோ பிரதி இயந்திரம்.

04. மின் பிறப்பாக்கி.(ஜெனறேட்டர்)

05. மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள், காகிதாதிகள்.

06. காரியாலய தளபாடங்கள்.

07. கணனித்தொகுதி (computer unit )

இலவச இரவு நேர வகுப்புக்களில் பங்கு கொள்ளும் மாணவர் விபரம்.

கற்கை நேரம் : மாலை 4.௦௦ - இரவு 8.௦௦

தரம் 06 - 105
தரம் 07 - 106
தரம் 08 - 90
தரம் 09 - 45
மொத்தம் - 346

வருடாந்த முக்கிய நிகழ்வுகள்.

01. ஜனவரி முதல் வாரம் :- இலவச வகுப்புக்களுக்கான மாணவர் அனுமதியும், தரப்படுத்தல் பரீட்சைகளும்

02. ஏப்ரல் :- கல்வி சுற்றுலா

03.ஜூலை :- மாபெரும் சிறுவர் கலைவிழா.

04 . டிசெம்பர் :- சிறுவர் விளையாட்டு விழாவும், கலை நிகழ்சிகளும்.

இரவுநேர இலவச வகுப்பின்போது

இரவுநேர இலவச வகுப்பின்போது

சிறுவர் கலைவிழா - 2009

சிறுவர் கலைவிழா - 2009

சிறுவர் கலைவிழா 2008

சிறுவர் கலைவிழா 2008

விளம்பரங்கள்