திட்ட முன்மொழிவு
01. திட்டத்தின் தலைப்பி :-
கல்வி அபிவிருத்தி சங்கத்துக்கான இடத்தினை சீர் செய்து நிரந்தர கட்டிடம் அமைத்தல்.
02. இனம் காணப்பட்ட பிரச்சினை :-
இடை விலகிய மாணவர்களையும், கல்வியில் பின் தங்கிய மாணவர்களையும் தொடர்சியாக வலி நடாத்தி செல்ல நிரந்தரமான இடம் இல்லாமை.
03. திட்ட விபரம் :-
கல்வி அபிவிருத்தி சங்கமானது 2002 முதல் தனியார் காணியிலேயே இயங்கி வருகின்றது.
தினமும் மாலை 4.௦௦ மணிமுதல் இரவு 8.௦௦ மணிவரை இரவுநேர வகுப்புக்களை தனியார் காணியிலேயே கொட்டில்களை அமைத்து நடாத்தி வருகின்றோம்.
எமது பிரதேசமானது பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களையும், கல்வியிலே பின் தங்கிய மாணவர்களையும் சிறந்த கல்விமான்களாக மாற்றுவதற்குரிய செயற்பாடுகளிலே நிரந்தரமாக ஈடுபடக் கூடிய நிலையில் பல அமைப்புக்கள் உள்ளன. அவைகளின் செயற்பாட்டை நிரந்தரமாக்கல்
பகல் இரவு நேர கற்றல், கற்பித்தல். அறநெறிப்பாடசாலை நடாத்தல், கருத்தரங்குகளை நடாத்தல், சிறுவர் விளையாட்டு, வாசிகசாலை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு வள நிலையத்தை அமைத்தல்.
04. திட்ட நியாயப் படுத்தல் :-
குறிப்பிட்ட செயத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்படுகின்ற களுதாவளைக் கிராமம். பாரியதொரு கிராமமாகவும், பாரம்பரிய விவசாயக் கிராமமாகவும் இருக்கின்றது.
கடந்த காலங்களில் இடம் பெற்ற இடம் பெயர்வுகளினால் இப்பிரதேசத்தில் அதிகமான மக்கள் குடியேறி இருக்கின்றனர்.
பொருளாதார ரீதியாக பல கஸ்ரங்களை எதிர் நோக்கும் அதிகமான குடும்பங்களைக் கொண்ட பிரதேசம்.
கல்வி ரீதியில் வளர்ச்சி அடையும் பிரதேசமாக இருந்தபோதும் வறுமை காரணமாக அதிக மாணவர்கள் கல்வியிலிருந்து இடை விலகுகின்றனர்.
கல்வியை தொடர ஆர்வம் இருந்தும் போதிய பின்னுட்டல் கல்வி இன்மையால் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்படல்.
நிரந்தரமான பின்னுட்டல் நிலைமை இந்த பிரதேசங்களிலே இல்லாமை.
இப்பிரதேசத்திலே அதிக மாணவர்கள் இருப்பதனாலும் அயற் பிரதேச மாணவர்களுக்கும் பொதுவான ஒரு இடமாக அமைகின்றது.
05. நன்மை அடைவோர் :-
மாணவ, மாணவியர் உட்பட எமது ஒட்டு மொத்த சமூகமுமே.
06. திட்டத்தினை முன்னிலைப் படுத்துவோரும் பங்காளிகளும்.
கல்வி அபிவிருத்தி சங்கம் (கள ஆய்வு ரீதியாக எடுத்த திட்டம்)
கிராம அபிவிருத்தி சங்கம்
விவசாய உற்பத்தி கூட்டுறவு சங்கம்
இளைஜர் கழகம்
விளையாட்டுக் கழகம்
பெற்றோர்கள்.
07. பங்கு பற்றுனர் :-
கல்வி அபிவிருத்தி சங்கம், பிரதேச இளைஜர், யுவதிகள்
08. திட்டத்தினால் நன்மை அடையும் பெண்களின் வீதம் :- 50%
09. திட்டத்துக்கான நிதிப் பொறுப்பும் தொடர் கண்காணிப்பும் :-
கல்வி அபிவிருத்தி சங்கமும், பெற்றோரும்.
10. திட்டத்துக்கு தேவையான நிதியின் அளவு :- 10 மில்லியன்
இடத்தை சீர் செய்ய - 20 இலட்சம்
கட்டடம் சுற்றுமதில் - 60 இலட்சம்
மலசல கூடம் கிணறு - 2 இலட்சம்
வாசிகசாலை, உபகரணம், புத்தகம் - 5 இலட்சம்
கல்வி நிலையத்துக்கான உபகரணங்கள் - 10 இலட்சம்
ஏனைய செலவுகள் - 3 இலட்சம்
மொத்தம் - 10 மில்லியன்
11. போதுமான ஆளணி உள்ளதா :- ஆம்
12. திட்டத்தின் அளவு :- 150 x 100 மீற்றர் பரப்பு கொண்டது.
13. எந்த நிறுவனத்துக்கு உட்பட்ட திட்டம் :- பிரதேச சபை களுதாவளை (ம.தெ.எ.ப)
14. திட்டத்தின் பிரச்சினைகள் :- எதுவுமில்லை
15. திட்டத்தின் உள்ளீடுகள் பெறுவதில் தாமதம் உள்ளதா? :-
இல்லை அருகில் போதிய வளமுள்ளது.
16. பொருத்தமான இடமா :- ஆம் வரலாற்று ரீதியாக பல சாதனைகளை ஏற்படுத்தக்கூடிய இடம்.
17. திட்டத்துக்கு பொறுப்பான நிறுவனம் :- களுதாவளை கல்வி அபிவிருத்தி சங்கம். (EDS )
தயாரித்தவர் :- சே. அருள்ராஜா, களுதாவளை
நிறுவன முகவரி :-
பிரதான வீதி
களுதாவளை - 4
களுவாஞ்சிக்குடி