கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தொலை நோக்கு (VISION)
இன்றைய எமது இளைய சமுதாயம் எதிர் காலத்தில் கல்வி ரீதியான எழிற்சியும் சமுக பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்தல்.
கல்வி அபிவிருத்தி சங்கத்தின் துராநோக்கினை அடைவதற்கான வழிகள் (MISION)
01. பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களின் விபரங்கள் சேகரித்தலும் ஆய்வுகளை மேற்கொள்ளலும்
02. பெற்றோர்களுக்கு கல்வியின் அவசியம் தொடர்பில் கருத்தரங்குகள் போன்றவை மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
03. மாலை, இரவு நேர மற்றும் விடுமுறை நாட்களில் இலவச வகுப்புக்களை நடாத்துதல்.
04. கல்வியை தொடர முடியாத நிலையில் இருக்கின்ற வறிய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்குரிய வழிமுறையினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
05. கல்வி கற்று வேலையற்று இருக்கும் இளைஜர், யுவதிகளை இடைவிலகிய மாணவர்களுக்கான கற்பித்தல், கற்பித்தல் தொடர்பான புற செயத் பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுதலும் வழி நடாத்துதலும்
06. அரச, தனியார் துறைகளில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களை எதிர்கால சந்ததிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்வதற்காக உள்வாங்கல்.
07. அனைத்துலக கல்விமான்கள், சமுக நலன் விரும்பிகளின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெறல்.
08. அனைத்துலக நலன் விரும்பிகளுடாக கல்வியோடு இணைந்த கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தல்.
09. இளைய சமுதாயத்தின் கல்விக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அனைத்துலக அரச, அரச சார்பற்ற நிறுவனங்களோடு தொடர்பினை ஏற்படுத்தி எமது சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயற்படல்.
10. கல்வி ரீதியான தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு அதனுடாக மாற்றத்தை ஏற்படுத்தல்.
கல்வி நிறுவனத்தின் இலக்கு (GOALS )
01. இடை விலகிய மாணவர்களுக்கு பிரத்தியக வகுப்புக்களை தொடர்சியாக நடாத்தி மீண்டும் கல்வி செயற்பாட்டில் இணைத்தல்.
02. தினமும் கற்றலுக்கான நேரத்தை ஒதுக்கி இடை விலகிய மாணவர்களை வழி நடாத்துதல்
03. இடை விலகிய மாணவர்களுக்கான தொடர் பின்னுட்டலும், கற்றலுக்கான உதவிகளையும் பெற்றுக் கொடுத்தல்.
04. இடை விலகிய மாணவர்களின் பெற்றோரோடு நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி மாணவர்களின் முன்னேற்றத்தையும், பெற்றோரின் பங்களிப்பினையும் இடை விடாது பேணல்.
05. கற்றல் தொடர்பான புற செயற்பாடுகளான விளையாட்டு, சுற்றுலா, கலை, கலாசார நிகழ்வுகள், போட்டி நிகழ்சிகள் என்பனவற்றினை நடாத்துவதன் மூலம் கற்றலில் ஊக்கத்தை ஏற்படுத்தல்.
06. மாணவ குழுக்கள் மூலமான தலைமைத்துவ பண்புகளை ஏற்படுத்தல்.
07. பரிட்சைகள், மீட்டல்கள் என்பவற்றை ஒழுங்கான நேர சூசியோடு நடாத்துதல்
08. கற்பித்தலில் தேர்ச்சி பெற்ற ஆசான்களின் ஆலோசனைகளையும், புதிய நுட்பங்களையும் பயன்படுத்தல்.
09. இடை விலகிய மாணவர்களுக்கான கல்வி சார்ந்த உதவிகளையும், ஒத்துளைப்புக்களையும் பெற்றுக் கொடுத்தல்.
10. உலகெங்குமிருந்து உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் நிறுவனங்கள், நலன்விரும்பிகளோடு சிறந்த உறவினைப் பேணலும் ஆய்வு ரீதியான அறிக்கைகளை அவர்களுக்கு உரிய நேரத்தில் சமர்ப்பித்து உண்மைத் தன்மையைப் பேணல்
கல்வி அபிவிருத்தி சங்கத்தின் நோக்கம் (OBJECTIVE )
01. மாலை, இரவுநேர வகுப்புக்களை நடாத்துதல்.
02. சிறந்த கல்வியாளர்களை பயன்படுத்துதல்.
03. மாணவர்களுக்கு உளவள ஆலோசனைகளை தொடர்சியாக பெற்றுக் கொடுத்தல்
04 . பெற்றோருக்கு உளவள ஆலோசனைகளை தொடர்சியாக பெற்றுக் கொடுத்தல்.
05. கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல்.
06. விபரங்கள் திரட்டல்.
07. படித்த இளைஜர் , யுவதிகளை கற்பித்தல் செயற்பாடுகளில் உள்வாங்கல்.
08. காகிதாதிகள், கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்களை நலன் விரும்பிகளிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் துரித கதியில் பெற்றுக் கொடுத்தல்.
09. இடை விலகிய மாணவர்களுக்குரிய உணவு சார்ந்த போசனை பொருட்களை வழங்கல்.
10 . கற்றல், கற்பித்தல், கல்வியின் அபிவிருத்தி மட்டங்களை உடனுக்குடன் மதிப்பிடு செய்தல்.
எம்மைப் பற்றி
-
கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக கல்வி, கலை, கலாசாரத்துறைகளில்
பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி பலரதும்மனதில் இடம் பிடித்த ஒரு சமுக சேவை
அமைப்பாக கல்வி அபிவிரு...
14 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்