சிறுவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாளைய சமூகத்துக்காக சிந்திப்போம்.

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெள்ளி, 1 ஜனவரி, 2010 0 கருத்துகள்


இன்று புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இந்த புதுவருடம் அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று ஆரவாரமாக நாம் புது வருடத்தினைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொரு விசேட பண்டிகைகளையும் மிகவும் சிறப்பான முறையிலே ஒவ்வொருவரு ஒவ்வொரு விதமாக கொண்டாடுவோம். எத்தனையோ ஆடம்பரங்கள் , தேவையற்ற செலவுகள் செய்கின்றோம்.


ஆனாலும் இன்று தாய், தந்தை, சொந்தங்களை இழந்த பல சிறுவர்கள் எத்தனையோ சிறுவர் இல்லங்களிலே அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏனைய சிறுவர்கள் இவ்வாறான விசேட தினங்களிலே புத்தாடை அணிந்து வான வேடிக்கைகளோடு ஆடிப்பாடி விளையாடும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை நாம் ஒரு நாளாவது எண்ணிப் பார்த்திருக்கின்றோமா?


நாம் இந்த விசேட பண்டிகைகள், தினங்களிலே அனாவசியமாக, ஆடம் பரங்கள் மூலம் வீண் செலவுகள் செய்வதனை விடுத்து அந்த பணத்தை கொண்டு சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்றைய நாளை அவர்களோடு நம் பொழுதைப் போக்கலமால்லவா? இதனால் அந்த சிறுவர்களின் மனதிலே ஒரு சந்தோச உயணர்வு தோன்றுமல்லவா?


நாம் எத்தனை பேர் இந்த சிறுவர்களைப் பற்றி சிந்திக்கின்றோம். அவர்கள் குறிப்பிட்ட சிறுவர் இல்லங்களிலே நல்ல முறையிலே நடாத்தப்பட்டாலும் அவர்கள் மனதிலே தான் ஒரு அனாதை என்கின்ற, தன்னால் மற்றவர்களைப்போல் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்ற ஒரு கவலை இருக்கும்

இன்று இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை எத்தனையோ சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் சிறார்கள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் பலர் இருக்கின்றார்கள். அந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி யாராவது சிந்தித்திருக்கின்றோமா?


இன்று பெரிய வசதியான குடும்பத்திலே பிறந்த சில பெண் பிள்ளைகளின் வாழ்க்கையே சீதனம், வரதட்சனை, அது, இது என்று திண்டாட்டமாக இருக்கின்றது. இப்படி அவர்களுக்கு இந்த நிலை என்றால் அனைத்தையும் இழந்து சிறுவர் இல்லமே தஞ்சமென்று இருக்கின்ற சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற அந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமைய இருக்கின்றது. இன்று அழகு, அந்தஸ்து பெரிய இடமென்று எல்லோரும் பெரிய இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக சிந்திப்போம்

இன்றைய நம் சிறுவர்களே நாளைய நம் தலைவர்கள் அவர்களின் எதிர் காலத்துக்காக நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம். நாம் இன்று நம் சிறுவர்களின் கல்வி வளர்சியிலே பின்தள்ளப் படுகின்றபோது நாளைய நம் சமுகத்தின் கல்வி நிலைதான் என்ன? சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்களின் மனதில் இருக்கின்ற கவலையின் காரணமாக படிக்கத்தான் முடியுமா?

எம்மைப் பற்றி

  • எம்மைப் பற்றி - கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக கல்வி, கலை, கலாசாரத்துறைகளில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி பலரதும்மனதில் இடம் பிடித்த ஒரு சமுக சேவை அமைப்பாக கல்வி அபிவிரு...
    15 ஆண்டுகள் முன்பு

இரவுநேர இலவச வகுப்பு ஒன்று கூடலின்போது

இரவுநேர இலவச வகுப்பு ஒன்று கூடலின்போது

இன்றைய உடனடித் தேவைகள்

01. கல்வி நிலையத்துக்கு நிரந்தரமான காணியும், கட்டடமும்

02. வாசிகசாலையும், அதற்கான புத்தகங்களும், தளபாடங்களும்.

03. போட்டோ பிரதி இயந்திரம்.

04. மின் பிறப்பாக்கி.(ஜெனறேட்டர்)

05. மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள், காகிதாதிகள்.

06. காரியாலய தளபாடங்கள்.

07. கணனித்தொகுதி (computer unit )

இலவச இரவு நேர வகுப்புக்களில் பங்கு கொள்ளும் மாணவர் விபரம்.

கற்கை நேரம் : மாலை 4.௦௦ - இரவு 8.௦௦

தரம் 06 - 105
தரம் 07 - 106
தரம் 08 - 90
தரம் 09 - 45
மொத்தம் - 346

வருடாந்த முக்கிய நிகழ்வுகள்.

01. ஜனவரி முதல் வாரம் :- இலவச வகுப்புக்களுக்கான மாணவர் அனுமதியும், தரப்படுத்தல் பரீட்சைகளும்

02. ஏப்ரல் :- கல்வி சுற்றுலா

03.ஜூலை :- மாபெரும் சிறுவர் கலைவிழா.

04 . டிசெம்பர் :- சிறுவர் விளையாட்டு விழாவும், கலை நிகழ்சிகளும்.

இரவுநேர இலவச வகுப்பின்போது

இரவுநேர இலவச வகுப்பின்போது

சிறுவர் கலைவிழா - 2009

சிறுவர் கலைவிழா - 2009

சிறுவர் கலைவிழா 2008

சிறுவர் கலைவிழா 2008

விளம்பரங்கள்