நாம் எதிர் கொள்ளும் சவால்கள்.

இடுகையிட்டது கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெள்ளி, 1 ஜனவரி, 2010
நாம் எமது கல்வி நிலையத்தின் மூலம் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கல்வியும் அதனோடு சார்ந்த பல்வேறு செயத் திட்டங்களை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கல்வி அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்போடு நடைமுறைப் படுத்தி வருகின்றோம்.

2010  க்காக கல்வியும் அதனோடு சார்ந்த பல்வேறு முக்கிய செயத்திட்டன்களை நடைமுறைப் படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். இருந்தபோதும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலே நிதிப் பற்றாக் குறையின் காரணமாக பல  சிக்கல்களை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது.

நாம்  தற்போது முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினைகள்.

01. கல்வி நிலையத்துக்கு நிரந்தர காணி, கட்டிட வசதி இல்லாமை.

தற்போது தனியார் காணியிலே தகரத்தினால் பல கொட்டில்களை அமைத்து மாலை நான்கு மணி தொடக்கம் இரவு எட்டு மணிவரைக்கும் மாணவர்களுக்கு இலவச வகுப்புக்களை வழங்கி வருவதோடு, மாதாந்த பரிட்சைகளையும் நடாத்தி வருகின்றோம்.

இரவு நேர இலவச வகுப்புக்கு வருகை தரும் மாணவர் விபரங்கள்.

தரம்  6 - 105
தரம் 7 - 106
தரம் 8 - 90
தரம் 9 - 45
மொத்தம் - 346

இத்தனை மாணவர்களும் இந்த இரவு நேர வகுப்பின் மூலம் பல நன்மைகளை அடைகின்றனர்.

இன்று கல்வி நிலையத்துக்கான இடம் தொடர்பிலே பல பிரச்சினைகளை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது. தற்போது கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணிக்கு சொந்தக்காரர் விரைவில் எமது கல்வி நிலையத்தினை வேறு இடத்துக்கு மாற்றும்படி சொல்லி இருக்கின்றார். அதனால் வேறு இடத்துக்கு மாருவதிலே இடத்தைப் பெறுவதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன.

உடனடியாக நாம் இடத்தினை பெற முடியாவிட்டால் இந்த 346 மாணவர்களது கல்வி நிலையில் சிறு தளம்பல் ஏற்படலாம்.

02. மின் பிறப்பாக்கி.(ஜெனறேட்டர்) இல்லாமை.

இரவு நேரத்தில் வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி மின்சாரம் தடைப் படுவதால் மெழுகு வர்த்தியிலேயே படிக்க வேண்டிய நிலை அடிக்கடி உருவாகின்றன. சில நாட்களில் மின்சாரம் தடைப் பட்டதால் வகுப்புக்களை இடை நடுவில் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு.

03. போட்டோ பிரதி இயந்திரம் இல்லாமை.

போட்டாப் பிரதி இயந்திரம் எமது கல்வி அபிவிருத்தி சங்கத்துக்கு மிக மிக அவசியமான ஒன்று மாதாந்தப் பரிட்சைகள் வைப்பதாலும் வேறு எமது சங்கத்தின் செயட்பாடுகளுக்காகவும் அதிகமாக போட்டோ பிரதி எடுக்க வேண்டி இருக்கின்றன. இவற்றை நாங்கள் வெளியில் எடுப்பதனால் போட்டோ பிரதிக்காக மாதாந்தம் அதிக செலவு செய்யவேண்டி இருக்கிறது. போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை பெறுவதன் மூலம் மாதாந்தம் அதிக பணத்தினை சிக்கனப் படுத்துவதோடு அப்பணத்தினை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.

04. வாசிகசாலையும், அதற்கான புத்தகங்களும், தளபாடங்களும் இல்லாமை.

எங்களிடம் 346 மாணவர்கள் இருந்தபோது ஒரு வாசிகசாலை இல்லை. ஒரு வாசிக்க சாலையும், அதற்குரிய புத்தகங்களும், தளபாடங்களும் இருக்கின்றபோது பாடவேளை தவிர்ந்த ஏனைய நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் பயன்படுத்துவதோடு, ஆசிரியர்களும் பல நன்மைகளை அடைய முடியும். இதன் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் பரந்த அறிவினைப் பெற முடியும்.

05. காரியாலய தளபாடங்கள் இல்லாமை.

கல்வி நிலையத்திலும் எமது பிரதான அலுவலகத்திலும் போதிய அலுவலக தளபாடங்கள் இல்லாமையால் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றோம். குறிப்பாக பரிட்சை வினாத்தாள்களை, மாணவர்கள் தொடர்பான ஆவணங்கள் வைப்பதற்குரிய வசதிகள் இல்லாமை.

மாணவர்களுக்கு வைக்கப் படுகின்ற பரிட்சைகளின் பெறுபேறுகள் பெற்றோருடைய பார்வைக்கு வழங்கப்பட்டு ஒவ்வொரு மாணவரது பெற்றோரும்  கையொப்பமிடப்பட்டு பேணப்பட்டு வருகின்றன ஆனால் அவற்றை வைப்பதற்குரிய அலுவலக தளபாடங்கள் இன்றி பல சிக்கல்களை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது.

06.  கணனித்தொகுதி (computer unit ) வசதி இல்லாமை.

வளர்ந்து வரும் தொழிநுட்ப வளர்ச்சிக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையிலே மாணவர்களை தயார் படுத்தும் பொருட்டு மானவர்களுக்க் ஏற்ற வகையில்  தகவல் தொழினுட்பம் எனும் பாடத்தினை கற்பித்துவருகின்றோம். ஆனால் கணணி தொடர்பான செயன்முறைப் பயிற்சிகளை வழங்குவதற்கு கணணி வசதி இல்லை இதனால் பல சிக்கல்களை எதிர் நோக்கவேண்டி இருக்கின்றது.

0 கருத்துகள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

naazhaya ulahil siruvarkal

எம்மைப் பற்றி

  • எம்மைப் பற்றி - கடந்த ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக கல்வி, கலை, கலாசாரத்துறைகளில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி பலரதும்மனதில் இடம் பிடித்த ஒரு சமுக சேவை அமைப்பாக கல்வி அபிவிரு...
    14 ஆண்டுகள் முன்பு

இரவுநேர இலவச வகுப்பு ஒன்று கூடலின்போது

இரவுநேர இலவச வகுப்பு ஒன்று கூடலின்போது

இன்றைய உடனடித் தேவைகள்

01. கல்வி நிலையத்துக்கு நிரந்தரமான காணியும், கட்டடமும்

02. வாசிகசாலையும், அதற்கான புத்தகங்களும், தளபாடங்களும்.

03. போட்டோ பிரதி இயந்திரம்.

04. மின் பிறப்பாக்கி.(ஜெனறேட்டர்)

05. மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள், காகிதாதிகள்.

06. காரியாலய தளபாடங்கள்.

07. கணனித்தொகுதி (computer unit )

இலவச இரவு நேர வகுப்புக்களில் பங்கு கொள்ளும் மாணவர் விபரம்.

கற்கை நேரம் : மாலை 4.௦௦ - இரவு 8.௦௦

தரம் 06 - 105
தரம் 07 - 106
தரம் 08 - 90
தரம் 09 - 45
மொத்தம் - 346

வருடாந்த முக்கிய நிகழ்வுகள்.

01. ஜனவரி முதல் வாரம் :- இலவச வகுப்புக்களுக்கான மாணவர் அனுமதியும், தரப்படுத்தல் பரீட்சைகளும்

02. ஏப்ரல் :- கல்வி சுற்றுலா

03.ஜூலை :- மாபெரும் சிறுவர் கலைவிழா.

04 . டிசெம்பர் :- சிறுவர் விளையாட்டு விழாவும், கலை நிகழ்சிகளும்.

இரவுநேர இலவச வகுப்பின்போது

இரவுநேர இலவச வகுப்பின்போது

சிறுவர் கலைவிழா - 2009

சிறுவர் கலைவிழா - 2009

சிறுவர் கலைவிழா 2008

சிறுவர் கலைவிழா 2008

விளம்பரங்கள்